மாரம்பாளையத்தில், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ககோரி கலெக்டரிடம் மக்கள் மனு!!

மாரம்பாளையத்தில், தனியார்மில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்ககோரி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

Update: 2024-07-29 12:58 GMT
மல்லசமுத்திரம் அருகே, பருத்திப்பள்ளி கிராமத்திற்குட்பட்ட, பருத்திப்பள்ளி ஏரி அருகே, மாரம்பாளையம், சோமணம்பட்டி உள்ளிட்ட பகுதிவாழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 500ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்நிலத்தையொட்டி, பருத்திப்பள்ளி ஏரியில் இருந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 250ஏக்கர் விலைநிலங்கள் பயன்பெறும் வகையில் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக ராஜவாய்கால் ஒன்றும் பலதலைமுறைகளாக சென்றுகொண்டுள்ளது. தற்சமயம், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார்மில் நிறுவனமும், மாரம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரம் என்பவரும் சேர்ந்து, போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 20ஏக்கர் நிலங்களை கிரயம் செய்துள்ளனர். மேலும், பலதலைமுறையாக சென்றுகொண்டிருந்த ராஜவாய்க்காலை அழித்துவிட்டனர். இதனால், விவசாயம் தடைபட்டுள்ளது. மேலும், தனிநபர் நிலத்தில் தனியார் நிறுவனத்திற்கு செல்ல சாலை அமைத்துள்ளனர். எனவே, போலிஆவணங்கள் மூலம் கிரயம் செய்த பத்திரத்தை ரத்துசெய்யவும், ராஜவாய்க்காலை மீண்டும் மீட்டெடுக்கவும் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி நேற்று, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.

Similar News