Update: 2024-12-01 04:38 GMT
நம்பியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 11வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த தொழிலாளியான பழனிச்சாமி (வயது 47) என்பவர் அங்கு சென்றுள்ளார். பின்னர் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன்பின்னர் அவர்கள் இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்

Similar News