சிறுமி இறந்த பள்ளி மீண்டும் திறப்பு;

Update: 2025-01-21 03:53 GMT
விக்கிரவாண்டியில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்த அதே ஊரைச் சேர்ந்த பழனிவேலு மகள் லியாலட்சுமி,4, கடந்த 3ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்து இறந்தார்.அதனைத் தொடர்ந்து மூடப்பட்ட பள்ளி, 16 நாள் விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. காலை 8.30 மணி முதல் பள்ளிக்கு மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீார், மாணவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.ஆத்திரமடைந்த பெற்றோர் ஒன்று திரண்டு போலீசாரிடம், பள்ளி திறப்பதற்கு முன், பெற்றோர்கள் கூட்டம் நடத்தி, பள்ளியில் என்னென்ன பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.நேற்று பள்ளிக்கு 50 சதவீத மாணவர்கள் மட்டுமே வருகை தந்தனர்.

Similar News