தேர்வு

ஊரக திறனாய்வு தேர்வு : 2,520 மாணவர்கள் பங்கேற்பு;

Update: 2025-02-09 08:39 GMT
ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழக கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–-மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒன்பதாம் வகுப்பு மாணவ-–மாணவிகளுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.தேர்ச்சி பெறும் மாணவ–-மாணவிகளுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை அதாவது நான்கு ஆண்டுக்கு 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும். நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நேற்று மாவட்டத்தில் மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி, கோபி, சத்தி, நம்பியூர் உட்பட 15 மையங்களில் நடந்தது.2,700 மாணவ–-மாணவிகள், ஓ.எம்ஆர் முறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2,520 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 180 பேர் மட்டுமே ஆப்சென்ட் ஆகி இருந்தனர்.

Similar News