திருட்டு

இருசக்க வாகனத்தை காணவில்லை என புகார்ஈரோடு,;

Update: 2025-02-09 08:42 GMT
ஈரோடு கனிராவுத்தர் குளம் பச்சபாளி மேடு முத்து கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சரவண குமார் (46). கடந்தாண்டு மே 22ம் தேதி  மாலை 6 மணிக்கு தனது ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் இருசக்கர வாகனத்தை சத்தி சாலை கனிராவுத்தர் குளம் டாஸ்மாக் கடை முன் நிறுத்தி வைத்தார். மது பாட்டில்களை வாங்கி கொண்டு வந்த போது இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் நேற்று முன் தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News