தேர்த்திருவிழா
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தைப்பூச திரு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரை வடம் பிடித்து இழுத்தனர்;
தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பெளர்ணமி வருவதை தைப்பூச திருவிழாவாக தமிழ் கடவுளான முருகனின் ஆறுபடை உள்ளிட்ட பழமையான முருகன் கோவில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி அரங்கேறிய வரலாறு உண்டு இப்படி தனி சிறப்பு வாய்ந்த புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 3ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கியது.தொடர்ந்து பல்லக்கு சேவை மயில் வாகனகாட்சி பஞ்சமூர்த்தி புறப்பாடு யானை வாகன காட்சி, கைலயங்கிரி வாகன காட்சி ,காமதேனு வாகன காட்சி எனத் தொடர்ந்து முருக பெருமான் பல்வேறு வகைகளில் பக்தர்களுக்கு காய்ச்சலைத்தார் இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் வள்ளி தெய்வானை முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வசந்த திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் என்று நடைபெற்றது இதில் ஈரோடு நாமக்கல் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துக்குமாரசாமி தரிசனம் செய்து அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது கோவிலில் இருந்து 200 மீட்டர் காங்கேயம் சாலையில் நிலைநிறுத்தநிலைநிறுத்தப்பட்டது தேரில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை ஆகிய உற்சவருக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் தேரை தொட்டு வணங்கிச் சென்றனர். தொடர்ந்து ஏராளமான பால் காவடி பன்னீர் காவடி இளநீர் காவடி சலங்கை ஆட்டம் மேற்கொண்டு முத்துக்குமாரசாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து மாலை நேரத்தில் மீண்டும் தேர் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட உள்ளது...