கைது
காவலாளியை கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளி கைது சென்னிமலையில் பதுங்கி இருந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர்;
ஈரோட்டை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் அரச்சலூர் அடுத்த பழைய பாளையம் அருகே உள்ள கரியங்காட்டு தோட்டம் பகுதியில் கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய தொழிற்சாலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 பேர் தொழிலாளிகளாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையின் இரவு காவலாளியாக அரச்சலூர் அடுத்த அஞ்சுராம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (64) என்பவர் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பழனிச்சாமி காவல் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் முகம் சிதைந்த நிலையில் தொழிற்சாலை வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைக் கண்டு அங்கு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவி பிடிக்கவில்லை. தடையவியல் நிபுணர்களும் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பழனிச்சாமி நேற்று முன்தினம் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு தொழிற்சாலையில் தங்கிப் பணி புரியும் அரியலூர் மாவட்டம், அஸ்தினபுரம், மண்டையங்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் (54) தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் செல்வத்தை சத்தம் போடக்கூடாது என பழனிசாமி கூறியுள்ளார். இதில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பழனிச்சாமி முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதேநேரம் கம்பெனியில் வேலை பார்க்க செல்வமும் மாயமாகிவிட்டார். இதனால் செல்வம் தான் கொலை செய்திருக்க கூடும் என சந்தேகித்த போலீசார் அவரைப் பிடித்த தனிப்படை அமைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் அருகே நின்று கொண்டிருந்த செல்வத்தை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது செல்வம், பழனிசாமியை கம்பியால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்