கருத்தரங்கம்
"தானியங்கி தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு;
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை மாணவர் சங்கத்தின் சார்பில் "தானியங்கி தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு" என்ற தலைப்பில் ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு அன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரு. கே.ஆர். சந்தோஷ்குமார், மேலாளர் - திறமை கையகப்படுத்துதல் MACBRO டெக்னாலஜி, ஈரோடு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில் தானியங்கி வாகன வடிவமைப்பு, முன்மாதிரி கருவி மற்றும் தயாரிப்பு வளர்ச்சி ஆகியவை குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். மேலும் மாணாக்கர்கள் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளில் எவ்வாறு தொடர்ச்சியான முறையில் வேலை பளுவினை எதிர்கொள்வது குறித்து மாணாக்கர்களிடையே விவரித்தார். இக்கருத்தரங்கில் இயந்திரவியல் துறை துறைத்தலைவர் முனைவர். இ. மோகன்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாமேலும் துறை சார்ந்த பேராசிரியர்கள், புல முதல்வர்கள் மற்றும் பிற துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை துணை பேராசிரியர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் செய்திருந்தார். விழாவின் இறுதியில் சங்கத்தின் செயலாளர் செல்வன் கார்த்திகேயன் நான்காம் ஆண்டு இயந்திரவியல் துறை நன்றியுரை வழங்கினார்.