திங்களூர் நீச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரின் 21 வயது மகள், கடந்த 10ம் தேதி அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்று இருக்கிறார். அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். மேலும் பணியும் இடத்திலும் தேடி பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. மேலும், அப்பெண்ணுக்கும், விஜய் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மகேந்திரன் அளித்த புகாரின் பேரில், திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.