கைது
சென்னிமலையில் உள்ள தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்;
சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக சென்னிமலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி, தலைமை காவலர் சேகர், தனிப்பிரிவு தலைமை காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தனியார் விடுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விடுதியில் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கே.சி.நகரை சேர்ந்த தனியார் விடுதி மேலாளர் அருண் (28), பெருந்துறை ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜா (45), சென்னிமலையை சேர்ந்த அருள் குமார் (35), வெங்கடேஷ் (53), நத்தாக்கடையூரை சேர்ந்த அங்கப்பன் (52), ரவிக்குமார் (53), தவமணி (35), சுரேஷ் (35) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.