ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், அறச்சலூர் அருகே உள்ள தலவுமலை பகுதியில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டு மது விற்ற ராமநாதபுரம் மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் மூர்த்தி ( 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 63 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோன்று, ஈரோடு நாடார்மேட்டில் மதுவிற்பனையில் ஈடுபட்ட, மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த சடையப்பன் (63) என்பவரை, ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.