அபராதம்

பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்;

Update: 2025-02-19 12:43 GMT
தமிழகம் -கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகாரம் ஏற்றி வரும் சரக்கு லாரிகளால் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி வரும் லாரிகளை கண்டறிய பண்ணாரி சோதனை சாவடி மற்றும் காரப்பள்ளம் சோதனை சாவடிகளில் உயர் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பாரம் ஏற்றி வரும் லாரிகள் இந்த உயர தடுப்பு கம்பி வழியாக செல்ல இயலாது. இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் இருந்து பீடி இலைகள் அடங்கிய மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி திருநெல்வேலி செல்வதற்காக பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் அமைந்துள்ள உயர் தடுப்பு கம்பி வழியாக சென்றபோது அதிக உயரத்திற்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் லாரி உயர்த்தடுப்பு கம்பி வழியாக செல்ல இயலாமல் நின்றது. இதை அடுத்து பண்ணாரி வட்டாரப் போக்குவரத்து துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி வந்த லாரியின் உரிமையாளரான கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு ரூ.20,500 அபராதம் விதித்தார்.

Similar News