தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் துவக்கம் மாவட்டம் முழுவதும் 107 தேர்வு மையங்கள் மூலம் 10,711 மாணவர்களும் 11,283 மாணவிகளும் மொத்தம் 21994 பேர் பொது தேர்வினை எழுதுகின்றனர்;
தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று துவங்குகின்றது இன்று துவங்கும் இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 107 தேர்வு மையங்கள் மூலம்10,711 மாணவர்கள் 11283 மாணவிகள் என மொத்தம் 21994 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர் இந்த பொதுத் தேர்விற்காக 199 முதன்மை கண்காணிப்பாளர்கள் 199 துறை அலுவலர்கள் 2669 அரை கண்காணிப்பாளர்கள் 297 நிலையான பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு தேர்வு கண்காணிக்கப்பட உள்ளது மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் அச்சமின்றி தேர்வு எழுத உரிய ஆலோசனைகள் பெற 14 417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார் தேர்வு மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் தேர்வு மையம் உள்ளே செல்போன் உள்ளிட்ட பொருட்கள் அனுமதிக்கப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று சுப்பையா வித்யாலயம் பள்ளியில் காலையிலேயே பள்ளிக்கு வந்த மாணவிகள் விநாயகர் ஆலயம் முன்பு வழிபாடு நடத்தியதுடன் பின்னர் ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டு தேர்வை எழுதி வருகின்றனர்