திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள் பங்கேற்பு; திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையம் சார்பில் வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி தலைமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நீதிமன்றங்களில் செலவு செய்து பல ஆண்டுகளாக வழக்குகள் தீர்வுக்காக காத்திருப்பதை விட சமரசம் மையம் மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கண்டு பயன்பெற வேண்டும் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்து சென்றனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி திருப்பத்தூர் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் சாண்டில்யன், சிறப்பு சார்பு நீதிபதி சந்தோஷ், சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் P. எழிலரசி, நீதித்துறை நடுவர் எண் 1 மகாலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயலட்சுமி, பயிற்சி நீதிபதிகள் கோவேந்தன், கீர்த்தனா, வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், கலந்து கொண்டனர்.
