விண்ணப்பதாரர்கள், குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணைய தளமான https://www.mimas.tn.gov.in இல் குவாரி குத்தகை தொடர்பான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.;
பெரம்பலூர்: கல், கிரானைட் குவாரி, குத்தகை உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு தகவல்! தமிழக அரசின் உத்திரவின்படி கல், கிரானைட் குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பங்களை ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில், சாதாரண கற்கள், கிரானைட் மற்றும் இதர சிறுகனிமங்களின் குவாhp குத்தகை உரிமங்கள் ஆன்லைன் முறையில் வழங்கப்படுவதற்கான நடைமுறை ஏப்ரல்-2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணைய தளமான https://www.mimas.tn.gov.in இல் குவாரி குத்தகை தொடர்பான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்பங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் ஆன்லைனில் வழங்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் குவாரி குத்தகை உரிமம் பெற உரிய விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது, என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.