Update: 2025-07-13 13:36 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 15.வது வார்டுக்கு உட்பட்ட தியாகராஜ சுவாமி கோவில் தெரு பகுதியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று பின்னர் இளைஞர்கள் பெண்கள் தீர்த்த குடம் எடுத்து காளி வேடம் இட்டு மேள தாளங்களுடன் சிறப்பாக நடனமாடி கொண்டாடினர். தொடர்ந்து அப்பகுதியில் சிறப்பாக அம்மன் சாமி அலங்காரம் செய்து வைத்து பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். பின்னர் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

Similar News