தூத்துக்குடி பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை இதுவரை குற்றவாளியின் பெற்றோரை கைது செய்யவில்லை காவல்துறை இந்த கொலைக்கு உடந்தையாக உள்ளது காவல்துறை மீது நம்பிக்கை இல்லை எனவே இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கவினின் தந்தை கோரிக்கை;
தூத்துக்குடி பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை இதுவரை குற்றவாளியின் பெற்றோரை கைது செய்யவில்லை காவல்துறை இந்த கொலைக்கு உடந்தையாக உள்ளது காவல்துறை மீது நம்பிக்கை இல்லை எனவே இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கவினின் தந்தை கோரிக்கை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நெல்லையில் வைத்து ஆணவ படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளியின் தாய் தந்தையான இருவரும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் தூண்டுதல் மற்றும் ஆதரவின் பேரிலேயே இந்த ஆணவக் கொலை நடைபெற்றுள்ளது காவல்துறை மூன்று நாட்களாகியும் குற்றவாளியின் தாய் தந்தையை கைது செய்யவில்லை இதைத்தொடர்ந்து பொறியாளர் கவின் உடலை வாங்க மறுத்து மூன்றாவது நாளாக ஆறுமுகமங்கலம் கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் தந்தை சந்திரசேகர் கூறுகையில் தனது மகன் இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த ஆணவக் கொலை காவல்துறை துறை துணையுடன் தான் சதி திட்டம் தீட்டி நடைபெற்றுள்ளது ஏனென்றால் குற்றவாளியின் தாய், தந்தை இருவரும் காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர் அதன் காரணமாக காவல்துறையினர் இந்த வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுக்காமல் அவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் காவல் துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வரும் இதற்கு துணையாக இருந்து வருகிறார் அவரே குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறாரா பணத்தை கொடுத்து ஏமாற்ற முயற்சிக்கின்றனர் ஆணவக் கொலைகள் தொடர்புடைய தாய் தந்தை இருவரும் காவல்துறையில் இருப்பதால் காவல்துறையினர் முறையாக இந்த வழக்கை விசாரிக்க மாட்டார்கள் என்பதால் இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை ஒரு மாதம் ஆனாலும் எங்களுக்கு நீதி கிடைக்காமல் கவின் உடலை வாங்க மாட்டோம் எங்களுக்கு அரசு வழங்கும் நிதி வேண்டாம் நீதி மட்டுமே வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்