விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்;வாழைநார் பட்டு மற்றும் இயற்கை நிறமிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சேலைகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையினை கோ'ஆப்டெக்ஸ், மண்டல மேலாளர் திரு.P.ஸ்டாலின், விற்பனை நிலைய மேலாளர் திருமதி.R.கீதா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.கைத்தறி இரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக மாநில அரசு இந்த ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக, பட்டு மற்றும் பருத்தி கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கி உள்ளது.மேலும் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென் பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம், செட்டிநாடு, சேலம், பரமக்குடி, திண்டுக்கல் அருப்புகோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக வாழைநார் பட்டு மற்றும் இயற்கை நிறமிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் சேலைகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மேலும் மாவட்டத்தில் உள்ள 3 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.155 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.