ஈரோட்டில் NIA அதிகாரிகள் சோதனை

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்புடையவர்களின் இரண்டு நபர்களின் வீடுகளில் NIA சோதனை நடைபெற்றது.;

Update: 2024-06-30 14:01 GMT
ஈரோட்டில் NIA அதிகாரிகள் சோதனை

என்ஐஏ அதிகாரிகள் சோதனை

  • whatsapp icon

ஈரோடு செட்டிபாளையம் அருகேயுள்ள அசோக்நகர் ஆறாவது வீதியில் உள்ள குடியிருப்பில் சர்புதீன் என்பவரின் வீட்டில் திருப்பூரில் இருந்து வந்த ஐந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் பெரியார் நகரில் உள்ள முகமது இசாக் என்பவரின் வீட்டிலும் 5 என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவர் மீதும் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் இரண்டு பேர் மீதும் ஏற்கனவே HUT வழக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய இருவருடைய வீடுகளில் தற்போது NIA சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News