வட மாநில வாலிபர் அடித்து கொலை
கன்னியாகுமரி மாவட்டம், வேளிமலை பகுதியில் வடமாநில தொழிலாளி சக தொழிலாளியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள வேளிமலை பகுதியில் உள்ள எஸ்டேட் ஒன்றில் ஜார்க்கண்ட் மாநிலம் லெடிகார் பகுதியை சேர்ந்த மோகன் நகிசியா (19) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த திலேஷ் நகேஷியா (26) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இருவரும் எஸ்டேட்டிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காக குமாரபுரம் பகுதிக்கு வந்தனர். குமாரபுரத்தில் உள்ள ஒரு கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு பணம் கொடுப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இருவரும் அங்கிருந்து வேளிமலை எஸ்டேட்டில் உள்ள தங்களது குடியிருப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு சென்ற பிறகும் இருவருக்கும் மீண்டும் .தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த திலேஷ் நகேசியா கையாலும் கம்பாலும் மோகன் நகிசியாவை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து மோகன்,கொடுத்த புகாரின் பேரில் திலேஷ் நகோசியா மீது கொற்றிகோடு போலீசார் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இன்று மோகன் உயிரிழந்தார். இது சம்பந்தமாக கொலை வழக்காக மாற்றப்பட்டு தலைமறைவான திலேஷ் நகோசியாவை போலீசார் தேடி வருகிறார்கள்.