ஆந்திர எல்லைப் பகுதி சோதனை சாவடியில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

திருத்தணி அருகே ஆந்திர எல்லைப் பகுதி சோதனை சாவடியில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

Update: 2024-03-23 16:35 GMT

ஐ.ஜி ஆய்வு

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ல் நடைபெற உள்ளது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்,   திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை  திருப்பதி  தேசிய நெடுஞ்சாலை  ஆந்திர எல்லைப் பகுதி பொன்பாடி சோதனை சாவடியில்   வாகன சோதனையில் போலீசார்  தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர். 

இந் நிலையில் வடக்கு மண்டல ஐ.ஜி.  நரேந்திரன் நாயர்   பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஆந்திர  எல்லை பகுதி வழியாக தமிழகத்தில் நுழையும்  வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு  பின்னர் அனுமதிக்க வேண்டும் என்றும், 

தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள்,  பணம் பட்டுவாடா செய்வதை  தடுக்க அதிகாரிகள்  சோதனையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று  உத்தரவிட்டார்.  காஞ்சி சரக டி.ஐ.ஜி.பொன்னி,  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், திருத்தணி டி.எஸ்.பி   விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News