விருதுநகர் தொகுதியில் நிற்கவில்லை: துரைவைகோ
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நான் நிற்கவில்லை என துரைவைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமசந்திரன்,தங்கம் தென்னரசு,சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய,துரைவைகோ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தது.அதேபோல இந்த முறையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம்.இன்னும் 15 மாதங்கள் கால அவகாசம் இருப்பதால் மாநிலங்களவை பதவி தருகிறோம் என திமுக தெரிவித்துள்ளது.போதைப் பொருள் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் வளர்ந்த வண்ணமாக தான் உள்ளது.போதைப் பொருள் கடத்தல் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.
எந்த அரசியலுக்காகவும் நான் இந்த முயற்சியை எடுக்கவில்லை.விருதுநகர் தொகுதியில் நான் நிற்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துவிட்டேன் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காங்கிரஸ்,மதிமுக சட்ட உறுப்பினர்கள் என நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.