உதாசின் பாவாஜி மட இடங்களில் வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ்

உதாசின் பாவாஜி மடத்திற்கு பல கோடி வாடகை பாக்கி செலுத்தாத வாடகைதாரர்கள் உடனடியாக நிர்வாகத்தை அணுக அவர்களுக்கு உயர்நீதிமன்ற ஆணை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2023-11-29 02:29 GMT

நோட்டீஸ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உத்திரப்பிரதேச மாநிலத்தினை தலைநகரமாக கொண்டு 167 கிளைகளுடன் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது உதாசின் பாவாஜி மடம். இந்த மடத்திற்கு காஞ்சிபுரம் கிளையில் ரூ.750 கோடி மதிப்பிலான சொத்து மதிப்புள்ள  கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையான வாடகை இந்த மடத்திற்கு வாடகைதாரர்கள் செலுத்தாத காரணத்தால் நிர்வாகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் கிளையில் 30க்கும் மேற்பட்டோர் வேதம் பயின்று வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மட நிர்வாகத்திற்கு தேவையான நிதி கிடைத்ததில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மடத்தின் சார்பில் 176 இடங்கள் காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு முறையாக வாடகை செலுத்துவதில்லை என சென்னை நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் நீதிமன்றம் வாடகைதாரர்கள் வரும் டிசம்பர் நான்காம் தேதிக்குள் உதாசின் பாவாஜி மட நிர்வாகியை சந்தித்து வாடகை குறித்த பேச்சு வார்த்தைகள் மற்றும் வாடகை நிலுவைகளை செலுத்துவது குறித்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அவ்வகையில் நீதிமன்றம் அறிவுறுத்திய ஆணையை காஞ்சிபுரத்தில் வாடகைக்கு இருந்து வரும் நபர்களுக்கு இன்று விஷ்வ இந்து பரிசத் மாவட்ட தலைவர் சிவானந்தம், வழக்கறிஞர் ஜெயலட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் இது குறித்த ஆணை நகலை அளித்து அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சிவானந்தம் கூறுகையில் , கடந்த 10 வருடங்களுக்கு மேலாக படத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள நபர்கள் வாடகை செலுத்தாததால் பல்வேறு நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது இது மட்டுமில்லாமல் மேல் வாடகைக்கு விட்டு நிர்வாகத்தை அவமதிக்கும் செயலையும் செய்து வருகின்றனர். இதனால் ஆன்மீக பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 176 இடங்களில் உள்ள நபர்கள் சுமார் 20 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளனர். உடனடியாக நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நிர்வாகத்தினரை சந்தித்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மீறும் பட்சத்தில் மற்ற ஆணை பெற்று மீண்டும் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது உதாசின் பாவாஜி மட மடாதிபதி சுவாமி கர்ஷிணி அனுபவானந் மற்றும் மட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News