அண்மைக்காலமாகத் திமுக அராஜகம் - அண்ணாமலை
Update: 2023-11-02 04:29 GMT
கரூர் மாவட்டம் சிந்தாயூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இரு தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற குவாரி ஏலத்தில் பங்கேற்கச் சென்ற பிஜேபி நிர்வாகிகளை, திமுக நிர்வாகிகள் பலமாக தாக்கி, சட்டைகளை கிழித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் முன்பே அராஜகத்தை அரங்கேற்றம் செய்துள்ளனர். அண்மைக்காலமாக திமுகவினர் பொதுவெளியில் இது போன்ற அராஜகத்தை அரங்கேற்றம் செய்து வருகிறது. இது போன்ற செயல்களை கண்டித்து பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.என்றார்