கல்லறை தோட்டத்தில் திருப்பலி நடத்த எதிர்ப்பு
பாலூர் பகுதியில் கல்லறை தோட்டத்தில் திருப்பலி நடத்த எதிர்ப்பு. பெண்கள் உட்பட பலர் கைது;
Update: 2024-03-10 18:27 GMT
பெண்கள் உட்பட பலர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாலூர் பகுதியில் நாராயணநாடார் குடும்பத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் ஒன்று உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள இந்த கல்லறை தோட்டத்தை அவரது வம்சத்தை சார்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று திடீரென அந்தப் பகுதியை சார்ந்த கிறிஸ்தவர்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்போடு கல்லறைத் தோட்டத்திற்குள் பிரார்த்தனை நடத்த சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிந்துக்களை போலீசார் கல்லறைத் தோட்டத்திற்குள் போக அனுமதிக்காததோடு அவர்களை போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.