பைக் மீது லாரி மோதி விபத்து : முதியவா் பலி
தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-03 12:29 GMT
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் பெரியநாயகம் (65). இவா் நேற்று தனது மோட்டாா் சைக்கிளில் திருச்செந்தூா் சாலையில் சென்றுகொண்டிருந்தாராம். அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த பெரியநாயகத்தை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.