தீயில் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் ஊராட்சியில் கடந்த 16 ந்தேதி மாலை மக்காச்சோள வயலில் எரிந்து கொண்டிருந்த தீயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த மூதாட்டி 55 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

Update: 2024-03-19 09:45 GMT

தீ விபத்து 

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே பெருவளப்பூர் வடக்கு தெருவைத் சேர்ந்தவர் 64 வயதான பாப்பாத்தி். இவருக்கு சொந்தமான மக்காச்சோள வயலில் சருகுகளை கொளுத்திவிட்டனர். தீ எரிந்து கொண்டிருந்த நிலையில் பாப்பாத்தி மக்காச்சோளம் மூட்டையை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார் . அப்போது எரிந்து கொண்டிருந்த தீயில் எதிர்பாராதமாக தவறி விழுந்தார். இதில் அவருக்கு 55 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருவளப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News