கரூர் அருகே பைக் மீது ஆம்னி கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்

கரூர் அருகே பைக் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2024-04-13 15:31 GMT

காவல் நிலையம்

டூவீலர் மீது ஆம்னி கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், வடக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் ராகவேந்திர குமார் வயது 55 . இவர் பிப்ரவரி 7ஆம் தேதி காலை 6 மணி அளவில், திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் லாலாபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட, சித்தலவாய் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அதே சாலையில் வேகமாக வந்த கரூர், வெங்கமேடு,விவிஜி நகர், அன்னை சத்யா தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் ராகவேந்திர குமார் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் ராகவேந்திர குமாருக்கு இடது கால் முட்டி, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராகவேந்திர குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

ஆம்னி காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி,விபத்து ஏற்படுத்திய சிவப்பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல்துறையினர்.

Tags:    

Similar News