விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பயிலக திறப்பு விழா
பாப்பகாபட்டியில்,விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், பயிலக திறப்பு விழா நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-12-03 14:00 GMT
பாப்பகாபட்டியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பயிலக திறப்பு விழா நடைபெற்றது
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பக்காப்பட்டியில், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில், தளபதி விஜய் பயிலக திறப்பு விழாநடைபெற்றது. விஜய் மக்கள் இயக்க கரூர் மாவட்ட தலைவர் மதியழகன், விஜய் பயிலகத்தினை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவியருக்கு இனிப்புகளையும்,நோட்டு புத்தகங்களையும் வழங்கினார். இந்நிகழ்வின்போது, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாணவ -மாணவிகள் பலரும் உடன் இருந்தனர்.