பெரம்பலூர் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2024-03-01 08:40 GMT

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு இவரது மகன் பாலகிருஷ்ணன், இவர் நேற்று பெரம்பலூர் அரியலூர் சாலையில் நான்கு ரோடு அருகே பெரம்பலூர் நோக்கி நடந்த வந்து கொண்டிருந்தவர் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த பீல்வாடியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் நடந்து சென்றவர் நடந்து சென்ற பாலகிருஷ்ணன் மீது மோதி வலது புறம் சாலையில் தனது வண்டியை திருப்பி உள்ளார்.

அப்போது அரியலூர் நோக்கி வைக்கோல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினிலாரி ஆனந்தன் மீது மோதி விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் உயிரிழந்தார், இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பெரம்பலூர் போலீசார் ஆனந்தனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,

மேலும் விபத்து குறித்து மினி லாரி ஓட்டுநர் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சரவணன் 45 என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News