நகராட்சி தோப்பு குட்டை நீர்நிலை நடைபாதை திறப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரியில் இடங்கணசாலை நகராட்சி தோப்பு குட்டை நீர்நிலை நடைபாதை திறக்கப்பட்டது.;

Update: 2024-03-18 01:36 GMT

நடைபாதை திறப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் இடங்கணசாலை நகராட்சி நகராட்சிக்குட்பட்ட சின்னேரி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 48 லட்சத்தில் அமைக்கப்பட்ட மின் மயானம, கொசவபட்டி 4-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்ட தோப்புகுட்டை நீர்நிலை நடைபாதை திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் நகர தி. மு. க. செயலாளர் செல்வம், நகராட்சி துணைத்தலைவர் தளபதி, நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News