சேந்தமங்கலத்தில் நியாய விலைக் கடை, இ-சேவை மையம் திறப்பு
நியாய விலைக் கடை, இ-சேவை மையம் திறப்பு
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டியில் புதிய நியாய விலைக் கடை, பொது சுகாதார வளாகம் மற்றும் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் காளப்பநாயக்கன்பட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை, சேந்தமங்கலம் பேரூராட்சி, வார்டு : 3, அண்ணா நகர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பொது நிதி கீழ் கட்டப்பட்டுள்ள இ-சேவை மையம் ஆகியவற்றை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.
சேந்தமங்கலம், இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளா் அ.அசோக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம், துணை பதிவாளர் து.இரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர்கள் பா.பாப்பு (காளப்பநாயக்கன்பட்டி), சித்ரா தனபாலன் (சேந்தமங்கலம்), துணைத் தலைவர் கவிதா அசோக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.