நாசரேத்தில் போக்குவரத்து கண்ணாடிகள் திறப்பு

நம்ம நாசரேத் நல்ல நாசரேத் சார்பில் போக்குவரத்து பாதுகாப்புக் கண்ணாடிகள் ஆய்வாளர் ஜெயசீலன் திறந்து வைத்தார்.   ;

Update: 2024-01-21 10:28 GMT

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கவும் விபத்துக்களைத் தடுக்கவும் ஆபத்தான மர்காஷிஸ் சாலைத் திருப்பங்களில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து பாதுகாப்புக் கண்ணாடிகள்   நாசரேத்  காவல் ஆய்வாளர் ஜெயசீலன்  திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நம்ம நாசரேத் நல்ல நாசரேத் பொறுப்பாளர்கள் டாக்டர். விஜய் ஆனந்த், ராமச்சந்திரன், பாஸ்கர்,  வைகுண்டமணி, ஜோஸ் மென்ஸ் ஜோசுவா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News