திருவையாறுடன் திருப்பழனம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன், திருப்பழனம் ஊராட்சியை இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என கிராம மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலதத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-12-05 02:50 GMT
பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றார். அப்போது திருவைாறு அருகே திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர், காவிரி டெல்டா விவாசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர் தலைமையில், ஒன்றியத் தலைவர் அறிவழகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  திருவையாறு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் திருப்பழனம் கிராம ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் அதிகம் பேர் வாழ்கின்றனர். விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும்  ஆடு, மாடு, கோழி, போன்ற கால்நடை வளர்ப்பும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறில், திருப்பழனம் ஊராட்சியை சேர்ந்தால் முப்போகம் விளையும் நஞ்சை நிலம் பறிக்கப்படும் அபாயம் உள்ளது. நகராட்சியாக மாற்றப்பட்டால், கிராம மக்களின்  சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துவிடும். கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலை திட்டம் என்பது பறிபோகும் நிலை ஏற்படும், எனவே திருப்பழனம் கிராமத்தை திருவையாறுடன் இணைக்க பொதுமக்கள் ஏற்கவில்லை. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News