மருத்துவ கல்லூரி ஆவின் பாலகத்துக்கு சீல் வைக்க எதிர்ப்பு
Update: 2023-11-29 06:12 GMT
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பால் பூத் செயல்பட்டு வருகிறது. இதனை சந்திரன் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார் வருடம் தோறும் ஆன்லைன் மூலம் புதுப்பித்து வருகிறார். இந்த நிலையில் ஆவின் பூத்தை காலி செய்யுமாறு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டது. இதனை எதிர்த்து சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மருத்துவ கல்லூரி தரப்பில் நவம்பர் 28ஆம் தேதி மாலை 3 மணிக்குள் ஆவின் பூத்தை காலி செய்ய வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பி, நேற்று நாகர்கோவில் வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம். கல்லூரி டீன் பிரின்ஸ்பயஸ் மற்றும் அதிகாரியில் அங்கு சென்றனர். அப்போது ஆவின் பூத்தில் நடத்தி வரும் சந்திரன் தரப்பில் வக்கீல்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவு இருந்தால் தாருங்கள் என கேட்டனர். இதை அடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.