விஷ சாராயத்தால் எங்கள் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது !

விஷ சாராயம் விற்பனையால் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன என்றும், சாராயத்தை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிகிச்சை பெற்று வரும் நபர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

Update: 2024-06-21 06:27 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 36), ராஜேந்திரன் (55), மணிவண்ணன் (60) ஆகிய 3 பேரும் விஷ சாராயம் குடித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் ஆஸ்பத்திரி வளாகத்தில் மிகவும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் விற்பனையால் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன என்றும், சாராயத்தை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிகிச்சை பெற்று வரும் நபர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கார்த்திக்கின் அக்காள் செல்வி, ராஜேந்திரனின் மனைவி மல்லிகா, மணிவண்ணனின் மனைவி மகாலட்சுமி ஆகியோர் கண்ணீர் மல்க கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் விஷ சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. குறிப்பாக கருணாபுரத்தில் இரவு, பகல் என எப்போது சென்றாலும் சாராய பாக்கெட் கிடைக்கும் வகையில் விற்பனை செய்கிறார்கள்.

போலீசாருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. டாஸ்மாக் கடைக்கு சென்றால் ரூ.200 செலவு ஆகும். ஆனால் ரூ.60-க்கு பாக்கெட் சாராயம் கிடைப்பதால் கூலி வேலைக்கு செல்லும் ஆண்கள் அதை வாங்கி குடிக்கிறார்கள். இந்த சாராயத்தால் எங்களது குடும்பமே நடுத்தெருவில் நிற்கிறது. எனவே, சாராய விற்பனையை அரசாங்கம் முற்றிலும் ஒழிக்க வேண்டும், என்றனர்.

Tags:    

Similar News