கோவையில் V3 online Tv உரிமையாளர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கோவையில் சிறையில் அடைக்கப்பட்ட V3 online Tv விஜயராகவன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் படித்திருப்பதாக போலி சான்றிதழ் வைத்து மாத்திரைகள் தயாரித்த V3 online Tv உரிமையாளர் விஜயராகவன் மதுரையில் நேற்று கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வரப்பட்டார்.Myv3ads நிறுவனத்துக்கு சித்த மருத்துவ பொருட்கள் அனுப்புவது தொடர்பாக விஜயராகவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் போலிச் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு மருந்து தயாரித்து வருவது தெரிய வந்தது.
மதுரையில் விஜயராகவன் கைது செய்யப்பட்ட பொழுது நெஞ்சுவலி என்று சொன்னதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு உடல் நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என மருத்துவர்கள் கூறிய நிலையில் போலீசார் அவரை கோவை அழைத்து வந்தனர்.
நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த பொழுது தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கூறியதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.பரிசோதனையில் அவரது உடல் நலம் நன்றாக இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விஜயராகவன் தனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும் சர்க்கரை நோய் மற்றும் வெரிகோஸ் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து விஜயராகவன் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.