ப.சிதம்பரத்தின் குடும்பத்தால் எனக்கு வெற்றி உறுதி - பாஜக வேட்பாளர்
சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யாத ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் செயல்பாடுகள் தனக்கு பலமாக அமைந்துள்ளதாக பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் தெரிவித்தார் .;
Update: 2024-04-14 06:31 GMT
தேர்தல் பிரசாரம்
சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஊழலற்ற பாரத பிரதமரின் நல்லாட்சியை தொடரவும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யாத காங்கிரஸ் வேட்பாளரை விரட்டவும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேவநாதன் யாதவ் செல்லும் இடமெல்லாம் மக்களிடையே உற்சாக வரவேற்பு உள்ளதாகவும் பாரத பிரதமரின் திட்டங்களும், அண்ணாமலை நடைபயணமும், சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யாத ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் செயல்பாடுகளும் தனக்கு பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்