நாமக்கல்லில் PACL மாநில பணமீட்பு மாநாடு
நாமக்கலில் பணமீட்பு மாநாடு நடைபெற உள்ளது.
பிப்ரவரி 25 ந் தேதி PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மாநில பணமீட்பு மாநாடு விவசாய முன்னேற்றக் கழகம், PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இணைந்து நடத்தும் முதல் மாநில பணமீட்பு மாநாடு வரும் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வலையப்பட்டி (அரவிந்த் நர்சிங் கல்லூரி அருகில்) நடைபெற உள்ளது.
இது குறித்து விவசாய முன்னேற்றக் கழகம் மாநில பொதுச் செயலாளர் K.பாலசுப்ரமணியன், விவசாய முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் செல்ல, இராசாமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாய முன்னேற்றக் கழகம், PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இணைந்து நடத்தும் முதல் மாநில பணமீட்பு மாநாடு வரும் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வளையப்பட்டி (அரவிந்த் நர்சிங் கல்லூரி அருகில்) பகல் 1.00 மணி - 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் விவசாயிகள், PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.