சேலம் மணிபால் மருத்துவமனை சார்பில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
Update: 2023-11-29 02:57 GMT
ஓவிய போட்டி
சேலம் மணிபால் மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி டி.வி.என். திருமண மண்டபத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நடிகர் இமான் அண்ணாச்சி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த போட்டியில் நடுவர்களாக விமல், முரளிதரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் பல்வேறு பள்ளியில் இருந்து 1-ம்வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஓவியத்திறனை வெளிப்படுத்தினர். மணிபால் மருத்துவமனையின் சிறப்பு குழந்தைகள் நல டாக்டர் சுதர்சனம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.