காஞ்சிபுரத்தில் தொழிற்சங்கங்கள் நடத்திய மறியலால் பரபரப்பு

27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் காஞ்சிபுரத்தில் மறியல் போராட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்

Update: 2024-02-16 17:32 GMT

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் 

27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் காஞ்சிபுரத்தில் மறியல் போராட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

உணவுப் பொருள் விலைகளை கட்டுப்படுத்துதல், தொழிற்சங்க அங்கீகார சட்டம் கொண்டு வருதல் விவசாயிகளுக்கு விதை உரம் மற்றும் மின்சாரத்திற்கான மானியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் அகில இந்திய மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் இந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் , சிஐடியு, விசிக , உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினை சேர்ந்த தலைவர்கள் சுந்தர்வதனம், இளங்கோவன், விசிக மாவட்ட செயலாளர் எழிலரசன் ஆகியோர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மறியல் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பி கண்டன உரை நிகழ்த்தினர். ஊர்வலமாக செல்ல முயன்ற போது காவல்துறையினரால் கைது செய்ய முயன்ற போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு மோதல் ஏற்பட்டது.

அதன் பின்னர் சிறிது தூரம் ஊர்வலமாக சென்ற பின் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த வேலியூர் பகுதியில் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News