பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அம்மன்கோயிலில் நடைபெற்ற மகாகும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டம், வில்லுக்குறி பத்திரகாளி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த ஐந்து நாட்கள் தொடர்ந்து நடந்தன. விழாவை ஒட்டி கணபதி ஹோமம், சாயூஜ்ய பூஜை நடந்தது. இன்று காலை கணபதி ஹோமத்தை தொடர்ந்து கலசத்தில் ஊஷ பூஜை, மகா கும்பாபிஷேகம் போன்றவை நடந்தது. இதில் வெள்ளி மலை இந்து தர்ம வித்யாபீடம் தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் கலந்துகொண்டு ஆசி வழங்கினார்.
மதியம் அன்னதானமும், மாலை நட்டங்கோடு ஸ்ரீ சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி நடத்திய திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை வில்லுக்குறி இல்லத்தார் சமுதாய பத்திரகாளி அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஜவகர்,துணைத்தலைவர் தாணுமூர்த்தி, செயலாளர் ராஜேஷ் கண்ணன், துணைச் செயலாளர் ஜோதிபாசு, பொருளாளர் சசிதரன், துணை பொருளர் பன்னீர்செல்வம் செய்திருந்தனர்.