குமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் துவக்கம்

Update: 2023-11-22 10:42 GMT
குமரி வெங்கடாஜலபதி கோவில்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்தகேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு பவித்ர உற்சவம் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா 25-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இன்று காலையில் ஆச்சாரிய வர்ணம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.   மாலை 6.30 மணிக்கு அங்குரா அர்ப்பனம் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் திருவிழாவான நாளை (23-ந்தேதி) காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. 4-ம் திருவிழாவான 25-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு பவித்ர உற்சவம் நடக்கிறது.அப்போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. பவித்திர உற்சவ திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மின் விளக்கு அலங்கா ரத்தில் ஜொலிக்கிறது.
Tags:    

Similar News