கழிவுநீர்பாதை சரி செய்யக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்
பல்லடத்தில் கழிவுநீர்பாதையை சரி செய்யக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்;
By : King 24x7 Website
Update: 2023-12-13 03:57 GMT
பல்லடத்தில் கழிவுநீர்பாதையை சரி செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு சி எம் நகர் பகுதி. இப்பகுதியில் வெளியேறும் கழிவுகள் செல்லும் பாதையை நகராட்சி நிர்வாகம் அடைத்து வைத்திருப்பதன் காரணமாக அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக பலமுறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டி அப்பகுதி பொதுமக்கள் புளியம்பட்டி பொள்ளாச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை எடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.