மின்கம்பத்தை மாற்ற மக்கள் கோரிக்கை
சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2024-06-03 09:07 GMT
மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் செக் போஸ்ட் மேம்பாலத்திற்கு கீழ் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இவ்வழியாகத்தான் பாச்சலூர் மலை கிராமத்தில் இருந்து வரும் வாகனங்களும், இரண்டுசக்கர, நான்குசக்கர வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன.
இதன் அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றும் உள்ளது. ஆதலால் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். முஸ்லிம் கபர்ஸ்தான் காம்பவுண்ட் சுவற்றின் அருகே மிகவும் சேதமடைந்த துருப்பிடித்து நிலையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்துவிழும் அபாயம் உள்ளது. உடனடியாக மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.