பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2024-02-06 13:42 GMT

குறைகளை கேட்கும் மாவட்ட ஆட்சியர் 

பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 370 மனுக்கள் பெறப்பட்டது.

Advertisement

இன்றைய நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகள் வன்கொடுமை செய்யப்படுவதை தடுப்பது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தொப்பியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு அலுவலர்கள் மற்றும் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்டகுநர் சுரேஷ் கிறிஸ்டோபர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருளாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News