விஸ்வநாதபுரியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
விஸ்வநாதபுரியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-10 17:24 GMT
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட விஸ்வநாதபுரி பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 9ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திலக் விஸ்வநாதபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், அவரது வீட்டின் பின்புறத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 8 வாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்த க. பரமத்தி காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.