பெத்தநாயக்கன்பாளையத்தில் கார் பார்க்கிங் பிரச்சனை: கையை வெட்டிய பெண்
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் கார் ஓட்டுநரின் கையை வெட்டிய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றாவது வார்டு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜிணன் மகன் ராகுல் (24) கார் டிரைவராக இருந்து வருகிறார்.
வாடகைக்கு சென்று விட்டு இரவில் வீட்டின் முன் காரை நிறுத்துவது வழக்கம். வழக்கம்போல் நேற்று இரவு நிறுத்தி விட்டு மீண்டும் காலையில் வாடகைக்கு செல்வதற்காக காரை எடுக்க சென்றுள்ளார்.
அப்போது இவரது வீட்டின் எதிரே உள்ள சீனிவாசன் என்பதற்கு சொந்தமான இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. அதனை ராகுல் எடுக்கக் கூறியுள்ளார். இதனால் சீனிவாசன் மனைவி சத்யா மற்றும் சத்யாவின் தாய் தனலட்சுமி என்கின்ற அருக்காணி ஆகிய இருவரும் ராகுலிடம் தகதாத வார்த்தையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே சத்யாவின் தாய் கட்டையால் ராகுலின் தலையில் அடித்துள்ளார் பின்னர் பாக்கு அரிவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிவா மனையால் சத்யா ராகுலின் கையை வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் அலறிய ராகுல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெத்தநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து ராகுலுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து ராகுலின் மனைவி கவிதா அளித்த புகாரி அடிப்படையில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யா மற்றும் தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.