விருதுநகரில் ஆயிரம் நிவாரணம் கோரி தென்னை விவசாயிகள் மனு

விருதுநகரில் ஆயிரம் நிவாரணம் கோரி தென்னை விவசாயிகள் மனு அளித்தனர்.

Update: 2024-05-06 13:13 GMT

மனு அளிக்க வந்த விவசாயிகள்

தென்னை மரத்தில் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் பாதிப்பால் பாதித்த விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.15ஆயிரம் நிவாரணம் கோரி தென்னை விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் தாலுகாவில் சுமார் 24ஆயிரம் ஏக்கர் நீண்ட கால பயிரான தென்னை பயிர் செய்து வருகின்றனர். சுமார் 10ஆயிரம் விவசாய குடும்பங்கள் இதை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். தற்போது அடிக்கும் வெப்ப அலையால் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் வாடல் நோய் போன்ற தாக்குதல் அதிகரித்து தென்னை மரம் குலைகள் முதல் குருத்து வரை பாதிப்படைந்தது.

இதனால் பல்லாயிரக்கணக்கான மரம் கருகி அழிந்துள்ளது. இதனால் கடுமையாக அனைத்து விவசாயிகளும் பாதித்து வாழ்வாதாரம் இழந்து நிற்கும் நிலையுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறையும் பாதித்த பகுதியில் ஆய்வு செய்து ஒரு மரத்திற்கு ரூ.15ஆயிரம் நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

எஞ்சியுள்ள மரங்களை பாதுகாக்க ட்ரோன் மூலம் மருந்து அடிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

Tags:    

Similar News