வலியாற்றுமுகம் பகுதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி மனு

வலியாற்றுமுகம் பகுதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி கிராம ஊராட்சி உதவி இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-03-05 10:39 GMT

மனு அளித்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட வள்ளியாற்று முகம் நாடார் காலணி பொதுமக்களுக்கு கடந்த 15 வருடங்களாக அடிப்படை தேவையான குடிதண்ணீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் அவர்களின் அன்றாட தேவைக்கு குடிதண்ணீருக்காக சுமார் 1.5 K.M., தொலைவிலுள்ள பரளியாறு பகுதியில் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.வள்ளியாற்று முகம் நாடார் காலணி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டி கிராம ஊராட்சி உதவி இயக்குனர் அவர்களிடம் தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவு மாநில செயலாளர் & பெருங்கோட்ட பொறுப்பாளரும்,

முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க இணைய தலைவருமான E.S.சகாயம் அவர்கள் கோரிக்கை மனு அளித்து, பொதுமக்கள் குடிதண்ணீர் வசதி இல்லாமல் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தார்.

நிகழ்வில் அயக்கோடு பஞ்சாயத்து பா.ஜ.க தலைவர் அருமை சகோதரர் கிருஷ்ண பிரசாத் மற்றும் வள்ளியாற்று முகம் நாடார் காலணி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News